- हिं - हिंदी
- En - English
- తె - తెలుగు
- Sexual Health
- Premature Ejaculation
- Erectile Dysfunction
- Self-Analysis
- Low Sperm Count
- Low Libido Count
- Women's Health
- Irregular Periods
- White Discharge
- PCOS & PCOD
- Fertility Booster
- Heavy Menstrual Bleeding
- Skin Issues
- Fungal Infection
- Hair Problems
- Hair Growth
- Hair Dandruff
- Chronic Diseases
- Weight Loss
- Sleep Support
- Stress & Anxiety
- Doctor Consultation
- Medicine A-Z
- பாலியல் உடல்நலம்
- Hospital Directory
- Doctor Directory
- Health T.V.
- Web Stories
- சிகிச்சைகள்
- வீட்டு சிகிச்சைகள்
- அறுவை சிகிச்சை
- ஆய்வக சோதனை
- தெரப்பி சிகிச்சை
- ஹோமியோபதி
- யோகா மற்றும் உடற்பயிற்சி
- உடற்பயிற்சி
- உடல் எடை குறைப்பு
- உடல் எடை அதிகரிப்பு
- பெண் உடல்நலம்
- குழந்தை பராமரிப்பு
- Other Topics
- குழந்தை பெயர்கள்
- உடல்நல உணவுகள்
- Health News
- Medical Cannabis
- Login / Sign Up
- Sexual Problems
- Analyze Your Hair
- Stress Relief
ऑफर - Urjas Oil सिर्फ ₹ 1 में X
- உதவிக்குறிப்புகள்
- வேம்பின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
வேம்பின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் - Neem Benefits, Uses and Side Effects in Tamil
வேம்பு 4000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிற ஒரு மருத்துவ மூலிகை. வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் வெவ்வேறு வழிகளில் பயனுள்ளது. உண்மையில், வேம்பு அரிஷ்டா என்னும் சமஸ்கிருத பெயரைப் பயன்படுத்தி பிரபலமாக அழைக்கப்படுகிறது. அதாவது அதற்கு "நோய்களுக்கு நிவாரணம் அளிப்பவர்" என்று பொருள்.
வேப்ப மரம் வழக்கமாக கொத்து கொத்தாக இலைகளை கொண்டிருக்கும் மற்றும் 75 அடி வரை உயரமாக வளரக் கூடியது. இது பொதுவாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் வளரும். இருப்பினும், இது தெற்கு ஈரான் தீவுகளில் கூட வளர்ந்து வருகிறது. இது பசுமை நிறைந்த பச்சை நிறமானது, இந்த மரங்கள் எளிதாக இந்தியாவில் சாலையோரங்களில் வளர்ந்து இருப்பதை காணலாம்.
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, வளரும் நாடுகளில் சுமார் 80% மக்கள் பொதுவாக பாரம்பரிய மருந்துகள் மற்றும் தாவரங்கள் மற்றும் தாவர பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். வேம்பு அது போன்ற ஒரு மரமாகும். தோல் நோய்த்தொற்றுகள், செப்டிக் புண்கள், தொற்று ஏற்பட்ட தீக்காயங்கள் மற்றும் மனித உடலை பாதிக்கும் சில பூஞ்சை தொற்று போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்த இந்த மரம் பயன்படுத்தப்படுவதாக அறியப்படுகிறது. சோப்புகள், லோஷன் மற்றும் ஷாம்பு ஆகிய பல பொருட்கள் வேப்ப எண்ணெயை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. வேப்ப இலைகள் கொசுக்களில் இருந்து காப்பாற்றுவதற்கும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெதுவெதுப்பான தண்ணீரில் வேப்ப இலைகளை சேர்த்து பிறகு குளியல் எடுத்துக் கொள்வது அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேதங்களில் வேம்பு "சர்வ ரோக நிவாரணி" என்று குறிப்பிடப்படுகிறது, அதாவது "அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்" என்று பொருள்.
வேம்பு ஒரு இந்திய அற்புதம் மட்டும் அல்ல என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆப்பிரிக்காவிலும் இது நன்கு அறியப்பட்டிருக்கிறது, அங்கு இது "மஹோர்பனி" என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஆபிரிக்க நம்பிக்கைகளின்படி, வேம்பு நாற்பது பெரிய மற்றும் சிறிய நோய்களைப் பற்றி குணப்படுத்த முடியும்.
ஒரு மருத்துவ அற்புதம் என்பதை தவிர, வேம்பு சமயலில் கூட உணவு வகைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வேகவைத்து அல்லது வறுத்து கறிகளில் மற்றும் உணவு பதார்தங்களில் சமயல் பொருளாக பயன்படுத்தப்படலாம். மியான்மரில், வேப்ப இலைகள் சாலட்டில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இலைகளை உறைய வைத்திருக்கும் அவை இரண்டு மாதங்களுக்கு புதியது போலவே இருக்கும் என்பது இதன் சிறப்பு அம்சம். இந்த மூலிகையின் கசப்பான சுவையை மறைத்து ஒரு சுவையான பதார்த்தம் செய்ய சிறந்த வழி என்ன?
வேம்வு பற்றிய சில அடிப்படை தகவல்கள்:
- தாவரவியல் பெயர்: ஆசாதிராச்டா இன்டிகா
- குடும்பம்: மேலியாசீஸ்
- சமஸ்கிருத பெயர்: நிம்பா அல்லது அரிஷ்டா
- பயன்படுத்தப்படும் பகுதிகள்: விதைகள், இலைகள், பழங்கள், பூக்கள், எண்ணெய், வேர்கள் மற்றும் பட்டை போன்ற வேப்ப மரத்தின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தலாம்.
- உள்ளூர் பகுதி மற்றும் புவியியல் பரப்பு: வேம்பு மரம் முக்கியமாக இந்திய துணைக் கண்டத்தில் பயிரிடப்படுகிறது - இந்தியா, நேபாளம், மாலைதீவுகள், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்.
- பயன்கள்: வேப்ப மரத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தொழுநோய், கண் கோளாறுகள், குடல் புழுக்கள், வயிற்றுப்போக்கு, தோல் புண்கள் மற்றும் இரத்த நாளங்கள், காய்ச்சல், நீரிழிவு மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் ஆகியவற்றைக் கையாளுவதற்கு வேப்ப இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. வேப்ப எண்ணெய் ஒரு பயனுள்ள கருத்தடை சாதனம் ஆகும்.
- சுவாரசியமான உண்மை: யார் ஒருவர் தனது வாழ்நாளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேப்ப மரங்களை பயிரிடுகிறாறோ, அவர் சொர்கத்திற்குச் செல்வார்கள் என நம்பப்படுகிறது.
வேம்பின் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் - Neem nutrition facts in Tamil
காயங்களைக் குணப்படுத்துவதற்கான வேம்பு - neem for healing wounds in tamil, முடிக்கு வேம்பின் நன்மைகள் - neem benefits for hair in tamil, நோய் எதிர்ப்பு அமைப்புக்கான வேம்பு - neem for immune system in tamil, சருமத்திற்கு வேம்பின் நன்மைகள் - neem benefits for skin in tamil, ஆஸ்துமாவுக்கு வேம்பு - neem for asthma in tamil, இதயத்திற்கான வேம்பின் நன்மைகள் - neem benefits for heart in tamil, வேம்பின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் - neem anti-cancer properties in tamil, கருதடை சாதனமாக வேம்பு - neem as contraceptive in tamil, செரிமான அமைப்புக்கான வேம்பின் நன்மைகள் - neem benefits for digestive system in tamil, பல் சிதைவு பிரச்சினைகளுக்கு வேம்பு - neem for tooth decay problems in tamil, வேம்பின் பக்க விளைவுகள் - neem side effects in tamil, புரிந்து கொண்டது - takeaway in tamil.
வேம்பு இலைகள் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும் ஃபிளாவனாய்டுகளின் நல்ல ஆதாரமாக இருக்கின்றன. இதில் ஒரு இயற்கை பூச்சி விரட்டியான அசாடிராக்டின் உள்ளது. வேப்ப இலைகளில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள் போன்ற மற்ற சேர்மங்கள் மேலும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி மற்றும் கரோட்டின் போன்ற கனிமங்கள் உள்ளன. கூடுதலாக, அவை குளுட்டமிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், ப்ரெய்ன் மற்றும் பல கொழுப்பு அமிலங்கள் ஆகியவையும் அதிக அளவில் உள்ளன.
வேம்பு பூக்கள் பல்வேறு க்லுடமிக் அமிலம், டைரோசின் மற்றும் மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்களை வழங்குகின்றன.
அதிக கொழுப்பு நிறைந்த உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால் வேப்ப விதை ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. மற்றும் 200 க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களுக்கு எதிராக பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தக்கூடிய கசப்பான கலவைகள் அதில் உள்ளன, மேலும் அவை மனிதர்களுக்கு நச்சுத்தன்மையற்றவை.
Powered by myUpchar
வேம்பின் சுகாதார நலன்கள் - Neem health benefits in Tamil
- தோல் மற்றும் முடிக்கு : வேம்பு ஒரு ஆக்ஸிஜனேற்ற உணவு, இதனால் உங்கள் முடி மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது. இது உங்களுக்கு தோல் நோய்கள் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது. மேலும் அதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பரு மற்றும் காயத்தின் அளவைக் குறைப்பதில் உதவி செய்யும். தலைமுடியின் பேண்களை நீக்குவதற்கு பொதுவாக இது பயன்படுத்தப்படுகிறது மேலும் தலை பொடுகு மற்றும் உச்சந்தலையில் நமைச்சல் போன்ற சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
- நோய் தடுப்புக்கு : வேம்பு நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உங்கள் உடலை பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் வெளிநாட்டு உடல்களில் இருந்து பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
- வாய் மற்றும் வயிற்றுக்கு : வேம்பு பல் சிதைவு, தகடு குவிப்பு மற்றும் ஈறு அழற்சி மற்றும் தொற்று போன்ற பல்வேறு வாய்வழி உடல்நல பிரச்சினைகளில் இருந்து வேம்பு உங்களை பாதுகாக்கிறது. இது வயிற்று புண்களின் மேலாண்மைக்கு உதவுகிறது.
- இதயத்திற்கு : இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த வேம்பு உதவுகிறது, இதையொட்டி கரோனரி இதய நோய் மற்றும் அரித்மியாவின் ஆபத்தை குறைப்பதில் உதவுகிறது.
- புற்றுநோய்க்கு எதிராக : அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதை புற்றுநோயைத் தடுக்க சிறப்பான வகையில், குறிப்பாக கணையத்தின் தன்மைக்கு உதவுகின்றன.
- சுவாச பிரச்சனைகளுக்கு : வேம்பு இருமல், ஆஸ்துமா மற்றும் கபம் குவிக்கப்படுதல் போன்ற சுவாச பிரச்சினைகளின் மேலாண்மைக்கு உதவுகிறது.
காயம் குணமாகுதல் என்பது, நீங்கள் காயமடைந்த பிறகு தோல் மற்றும் திசுக்கள் தங்களைத் தாங்களே சரிசெய்து கொள்கின்ற ஒரு இயற்கை வழிமுறையாகும். வேம்பு ஒரு பயனுள்ள, இயற்கை காயம் குணமாக்கி என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேப்ப இலைகளில் அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் நிம்பிடின் மற்றும் சோடியம் நிம்பிடேட் போன்றவை இருக்கின்றன. இது வலி மற்றும் வீக்கத்தை மட்டும் குறைப்பது அல்லாமல், மேலும் அது காயம் பட்ட தளத்தில் மேற்கொண்டு தொற்று வாய்ப்புகள் ஏற்படுவதை குறைக்க உதவும்.
காயத்தை குணமாக்கப் பயன்படும் போவிடோன்-அயோடைன் எனப்படும் ஒரு கிருமி நாசினியுடன் வேம்பின் செயல்படு திறனை ஒப்பிட்டுப் பார்க்க ஒரு முன்மாதிரி ஆய்வு செய்யப்பட்டது. வேப்ப இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சாற்றினை கொண்டு காயத்தை ஆற்றும் முறையில் காயத்தின் அளவு கணிசமான அளவு குறைந்திருப்பதாக தெரிய வந்தது, இது போவிடோன்-அயோடைன்-ந் செயல்பாடுடன் ஒப்பிடத்தக்கது.
ஒரு மருத்துவப் ஆய்வில், திறந்த காயங்கள் கொண்ட 60 க்கும் மேற்பட்ட மக்களுக்கு 8 வார காலத்திற்கும் அதிகமாக வேப்ப எண்ணெய் ஒரு மேற்பூச்சாக தடவப்பட்டு வந்தது. 8 வாரங்களுக்கு பிறகு, காயத்தின் அளவு 50% குறைந்திருந்தது.
உங்கள் முடியை மென்மையான மற்றும் பட்டுபோன்ற அமைப்புடன் பராமரிக்க, சரியான முடி பராமரிப்பு என்பது முக்கியம். இது உங்கள் உச்சந்தலையில் எந்த பொடுகு மற்றும் பேண் தொல்லையும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த சிக்கல்களைத் தடுக்க வேம்பு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. வேம்பு , சிகைக்காய் ரீதா மற்றும் இன்னும் பிற பொருட்கள் கொண்ட கலவையை பயன்படுத்தி 28 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து ஒரு மருத்துவ ஆய்வு செய்யப்பட்டது. முடிவுகள் இந்த கலவை உச்சந்தலையில் அரிப்பு மற்றும் தலை பொடுகு ஆகியவற்றிற்கு எதிராக பயனுள்ளதாக இருந்தது என்று கூறியது. கலவையில் சேர்க்கப்பட்ட வேப்ப எண்ணெய் , வேப்பம் இலை மற்றும் இதர கூறுகளின் நுண்ணுயிர் எதிர்ப்பி பண்புகளே இதற்கு காரணமாக அமைந்துள்ளது என காட்சிப்படுத்தப்பட்டது.
தலை பேண் என்பது பள்ளி குழந்தைகள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. முதன்மையான பொருளாக வேம்பை கொண்டிருக்கும் ஷாம்பூக்கள் தலையில் உள்ள பேணை ஒழிக்க உதவும் என மேற்கொள்ளப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு தெரிவித்தது. வேம்பு ஷாம்பு இரசாயன அடிப்படையிலான ஷாம்புகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
நோயெதிர்ப்பு அமைப்பு என்பதே நமது உடலின் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய தொடக்கம் ஆகும். இது பல்வேறு பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் மற்றும் பிற வெளிநாட்டு உடல்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு அடிக்கடி தொற்றுநோய்களுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும். வேம்பு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும் என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.
முன் மருத்துவ ஆராய்ச்சி, வேம்பு சாறு, நோயெதிர்ப்பு அமைப்புகளில் நேர்மரையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபித்துள்ளது. குறிப்பாக, லிம்போசைட்கள் மற்றும் மோனோசைட்டுகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இருந்தது. இவை இரண்டும் வெள்ளை இரத்த அணுக்களின் ஒரு வகை ஆகும், அவை தொற்று நுண்ணுயிர்களை எதிர்த்துப் போராடுவதற்கு பொறுப்பாகும்.
(மேலும் வாசிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் )
தீங்கு விளைவிக்கும் மாசுபடுதல்கள் மற்றும் தொற்றுநோய்களால் பாதிக்கபடுவதால் நமது தோலிற்கு தொடர்ந்து கவனிப்பு தேவை. ஒழுங்கற்ற தோல் சுகாதாரத்தால் சிரங்கு , முகப்பரு , ஒவ்வாமை மற்றும் சொரியாசிஸ் போன்ற பல நிலைமைகள் ஏற்படலாம். பல்வேறு நோய்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய செயலில் உள்ள பொருட்கள் வேம்பில் உள்ளது என்று ஆராய்ச்சி குறிப்பிடுகிறது.
புரோபியோனிபாக்டீரியம் ஆக்னஸ் போன்ற முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை தடுக்க வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம் என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. டைடெர்பென்ஸ் - ஸ்டிக்மாஸ்டெரோல், டிரிடர்பென்ஸ், நிம்பிடின், மார்கோலின் மற்றும் மார்கோலோன் போன்ற கூறுகளை வேம்பு உள்ளடக்கியது. இந்த செயலில் உள்ள பொருட்கள் வேதியியலின் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்பு பண்புகளுக்கு பொறுப்பாகும்.
ஆஸ்துமா என்பது, சுவாசப்பாதைகளை சுருக்கமடைய செய்து, மூச்சு விடுவதை கடினமாக்கிவிடும் ஒரு நீண்ட கால பிரச்சனை ஆகும். மேலும் மூச்சுத்திணறல் மற்றும் இருமல் ஆகியவற்றுடன் இந்த நிலைமை மேலும் தொடர்புடையது. வேம்பு ஆஸ்துமா -வை தடுக்க உதவும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. அப்ளைட் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி இன்டர்நேஷனல் காப்பகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பம் இலைகள் ஆஸ்துமாவுக்கு சிகிச்சை அளிக்கவும் இருமல் மற்றும் கபம் ஆகியவை ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
ஆஸ்துமா சிகிச்சையில் வேப்ப விதைகள், பழங்கள், வேர்கள் மற்றும் பட்டை ஆகியவை பயனுள்ளவையாக இருப்பதாகவும், ஆயுர்வேத மற்றும் பிற பாரம்பரிய மருந்துகளிலும் காலங்காலமாக பயன்படுத்தப்படுகின்றன என மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. ஆஸ்துமாவுக்கு எதிரான வேம்பின் விளைவுக்கு அதன் அலற்சி எதிப்பு தன்மையே காரணம் என்று மேலும் கூறப்பட்டது.
கரோனரி தமனி நோய் மற்றும் அர்ரித்மியா (ஒழுங்கற்ற இதய துடிப்பு) போன்ற இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்க வேம்பு பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. கரோனரி தமனி நோய் என்பது மிகவும் பொதுவான ஒரு வகை இதய நோய் ஆகும். இது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது என வகைப்படுத்தப்படுகிறது. நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் இதனால் ஏற்படலாம்.
வேம்பு சாறு இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது என்று ஒரு முன் மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த சாறு இதய துடிப்பின் வேகத்தை (எதிர்மறை சமச்சீரற்ற விளைவு) மற்றும் இதய துடிப்பின் விகிதம் (எதிர்மறை க்ரோனோட்ரோபிக் விளைவு) ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.
(மேலும் வாசிக்க: இதய நோய் தடுப்பு )
புற்று நோய் என்பது உடல் செல்களில் அசாதாரண வளர்ச்சியை குறிக்கிறது. புற்றுநோய் வழக்குகள் தொடர்ந்து அதிகரிக்க, கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகளிலிருந்து கலப்படம் செய்யப்பட்ட உணவு மாசுபாடு வரையிலான பல காரணங்கள் உள்ளன. முன் மருத்துவ ஆய்வுகள் வேம்பில் உள்ள முக்கிய அங்கமாக இருக்கும் நிம்பிடைட் , சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் ஹீமோ பாதுகாப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்று குறிப்பிடுகின்றன. நிம்போலைட் புற்றுநோய்களின் உயிரணு சுழற்சியை இடைமறிப்பதன் மூலம் செயல்படுகிறது. இதனால் அவற்றின் வளர்ச்சி மற்றும் பரவுதல் தடுக்கப்படுகிறது. நிம்போலைட் புற்றுநோய் செல்களில் (திட்டமிடப்பட்ட செல் மரணம்) அபோப்டோசிஸையும் ஏற்படுத்துகிறது.
மற்றொரு ஆராய்ச்சியில் வேம்பில் உள்ள நிம்பிடைட் கணைய புற்றுநோய் செல்களில் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்கிறது என்று தெரியவந்தது.
இந்த முடிவுகள் புற்றுநோய் எதிர்பு மருந்துகளை தயாரிப்பதில் வேம்பிற்கான சாத்தியக்கூறுகளைக் காட்டுகின்றன.
தேவையற்ற கர்ப்பங்களைத் தடுக்க கருத்தடை சாதனங்கள் ஒரு சிறந்த வழியாகும். ஆனால் பல நாடுகளில் கருத்தடை முறைக்கான செலவுகள் மற்றும் இருப்புகள், மக்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன, இது தேவையற்ற கர்ப்பம் மற்றும் கருச்சிதைவுக்கான பாதுகாப்பற்ற வழிமுறைகளுக்கு வழிவகுக்கிறது. முன் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன, கருப்பையின் உள்ளே வேப்ப எண்ணெயின் பயன்பாடு கருத்தரிப்பு ஏற்படுவதற்கான தழைகீழ் செயல்பாட்டை தூண்டுகிறது. அதாவது இதன் பொருள் விலங்கு மாதிரிகள் எந்த பக்க விளைவுகளையும் காட்டவில்லை மேலும் சில மாதங்களுக்குப் பிறகு அவற்றின் கருத்தரிக்கும் வளத்தை மீட்டெடுக்க முடிந்தது.
மற்றொரு விவோ (விலங்கு அடிப்படையிலான) ஆய்வில், வேம்பு எண்ணையை யோனியின் வழியாக செலுத்தும் போது ஒரு சில விநாடிக்குள் விந்தணுக்களை செயல்படவிடாமல் தடுத்தது.
ஆராய்ச்சியின் இந்த முடிவுகளானது வேப்ப எண்ணெய் ஒரு மலிவு விலை மற்றும் நச்சுத்தன்மை அற்ற கருத்தடை கருவியாக இருப்பதைக் காட்டுகின்றன. இதனால் விலை உயர்ந்த கருத்தடை முறைகளை வாங்க முடியாத மக்களுக்கு எளிதில் கிடைக்கும்படியான ஒரு கருத்தடை கருவியை செய்ய முடியும்.
இரைப்பைக் கோளாறுகள் என்பது ஈஸ்ட்ரோஜஸ், சிறிய மற்றும் பெரிய குடல், மற்றும் வயிறு ஆகியவற்றை பாதிக்கும் ஒரு குழுவான கோளாறுகள் ஆகும். வயிற்று வலி , வயிற்றுப்போக்கு , வாய்வு மற்றும் வாந்தி ஆகியவை இந்த கோளாறுகளின் பொதுவான அறிகுறிகளில் அடங்கும். ஆராய்ச்சிகள் குடல் புண்கள் மற்றும் உயர் வயிற்று அமிலத்தன்மை போன்ற இரைப்பை நோய்களைத் தடுப்பதில் வேம்பு எண்ணெய் சிறந்தது என்பதைக் குறிக்கிறது. விவோ (விலங்கு அடிப்படையிலான) ஆய்வுகளில் வேப்பன் சாறின் பயன்பாட்டினால் வயிற்று புண் -களால் சேதம் அடைந்த திசுக்கள் மீளுருவாக்கம் பெருவது நிரூபிக்கப்பட்டது.
ஃபைட்டோதெரபி ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, வேம்பு ஒரு சிறந்த இரைப்பை பாதுகாப்பான் (வயிற்றைப் பாதுகாக்கிறது) மற்றும் புண் எதிர்ப்பு முகவர் ஆகும்.
ஒரு மருத்துவ ஆய்வுகளில், இரைப்பை குடல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 வார காலத்திற்கு தினசரி இரண்டு முறை வேம்பு சாறு 30 முதல் 50 கிராம் வரை வழங்கப்பட்டது . இரைப்பை புண்கள் மற்றும் இரைப்பைச் சாறுகளின் உயர் சுரப்பு ஆகியவற்றில் குறிப்பிடதக்க அளவு முன்னேற்றம் காணப்பட்டது.
பல் சிதைவு அல்லது பல் செல்கள் என்பது பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் அமிலங்களின் காரணமாக பல்லின் கட்டமைப்பு முறிவை குறிக்கிறது. சிகிச்சையளிக்கப்படாத பற்குழிவானது ஈறுகளுக்கு பரவக் கூடிய நோய்த்தொற்று ஆபத்துக்களை அதிகரிக்கிறது. வேம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பற்சிதைவை தடுக்க உதவுகின்றன மேலும் ஈறுகள் மற்றும் பற்களை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இலை மற்றும் மரத்தின் குச்சிகளில் இருந்து எடுக்கப்படும் எத்தனோலிக் சாறு எஸ். மியூட்டன்ஸ் மற்றும் எஸ். ஃபெக்கலிஸ் போன்ற வாய்வழி நோய்க்கிருமிகளுக்கு எதிரான நுண்ணுயிர் எதிர்ப்பு வினையினை வெளிப்படுத்தும்.
வேம்பு எண்ணெய் பாக்டீரியல் எதிர்ப்பு செயல்பாட்டை கூட கொண்டுள்ளது. மேலும் பல் தகடு உருவாவதை தடுக்க உதவும். பல் தகடு என்பது பற்களின் மீது படியும் ஒரு மெல்லிய பாக்டீரியா படலம் ஆகும்.
வேம்பில் இருந்து செய்யப்பட்ட பற்பசை அல்லது வேம்பில் இருந்து செய்யப்பட்ட வாய் கழுவி பற்குழிகள் ஏற்படாமல் தடுக்க உதவ முடியும். பற்குழிகள் என்பது ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோய் ஆகும். வேம்பில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு காரணம் அதில் இருக்கும் நிம்பிடின் மற்றும் அசாடிராச்டின் போன்ற உயிரியக்க சேர்மங்களே ஆகும்.
- ஆராய்ச்சியின் படி, வேம்பின் மிக அதிக பயன்பாடு கல்லீரல் சேதம் அல்லது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். 51 வயதான மனிதர் ஒருவர் அதிகப்படியாக வேம்பினை உட்கொண்டதால் பரந்த சிறுநீரக குழாய் அமிலத்தன்மை (டிஸ்டல் RTA) நோயால் அவதிப்பட்டார் என்ற தகவல் ஒன்று உள்ளது. இந்த நோயில் சிறுநீரகங்கள் சிறுநீரில் அமிலங்களை வெளியிடாமல் போய்விடும். இதனால் ஒரு நபரின் இரத்தம் அமிலத்தன்மையுடனே இருக்கும். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், அது சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
- வேம்பு விஷத்தன்மை ஏற்படுவது பெரியவர்களுக்கு மிகவும் பொதுவானது அல்ல, ஆனால் குழந்தைகள் மத்தியில் இந்த வகை நச்சுத்தன்மை ஏற்பட்டதாக பலவிதமான வழக்குகள் உள்ளன. வேம்பில் உள்ள செயல்படும் மூலப்பொருளான அசாடிராச்டின் விஷத்தன்மையை ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாந்தி, வலிப்பு , நச்சுத்தன்மை கொண்ட என்செபலாபதி (ஒரு நரம்பியல் கோளாறு), வளர்சிதை மாற்ற அமிலத்தன்மை (சிறுநீரகங்கள் உடலில் இருந்து அமிலங்களை நீக்காத ஒரு நிலை) மற்றும் மருந்தினால் தூண்டப்பட்ட கல்லீரல் சேதம் (ஹெபாடிக் நச்சுத்தன்மை) போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
- பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்டிருப்பதாக அறியப்படும் வேம்பு எண்ணெய் சில நேரங்களில் ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தும். பல வழக்குகள் இல்லை என்றாலும், சிலருக்கு வேப்ப எண்ணெய் தடவுவதால் ஒவ்வாமை ஏற்படலாம்.
வேப்ப மரத்தின் அனைத்து பகுதிகளிலும் குணப்படுத்துவதற்கான நன்மைகள் இருப்பதை அறியலாம். வயிற்றுக் கோளாறுகளை தடுப்பதில் வேம்பு சிறந்தது, பற்கள் மற்றும் ஈறுகளை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது, மேலும் புற்றுநோய் வளர்ச்சியை குறைக்க உதவுகிறது. வேப்ப இலைகள் ஆஸ்துமாவில் இருந்து தடுக்கிறது. மேலும் வேப்ப எண்ணெயை மலிவு விலை கருத்தடை கருவியாக பயன்படுத்தலாம். இருப்பினும், வேம்பை அதிகமாக உட்கொள்ளல் சிறுநீரக செயலிழப்பு மற்றும் கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும். சிலர் வேம்பிற்கு ஒவ்வாதவர்களாக இருக்கலாம்.
மிதமான அளவுகளில் வேம்பை பயன்படுத்துவதால் அனைத்து சுகாதார நலன்களையும் பெற முடியும். மேலும் உடலை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும்.
Medicines / Products that contain Neem
- Kesh Art Bhringraj Hair Oil for Controlling Hair Fall & Dandruff, Grow Hair 2X Fast - ₹546
- Myupchar Ayurveda Nimbadi Churna Tablet - ₹392
- myUpchar Ayurveda Yakritas Capsule For Liver Support - ₹542
- myUpchar Ayurveda Madhurodh Capsule For Sugar Control - ₹691
- Myupchar Ayurveda Nalpamaradi Ointment - ₹492
- Myupchar Ayurveda Maha Marichyadi Ointment - ₹626
- Sprowt Multivitamin with Probiotics - 45 Ingredients Improves Immunity, Gut Health, Good For Bones & Joint Health - ₹446
- myUpchar Ayurveda Kesh Art Anti-Dandruff Shampoo - ₹481
- Aimil Amree Plus Capsule - ₹117
- Kerala Ayurveda Nimbadi Kwath 200ml - ₹130
- Herbal Hills Keshohills Hair Wash Shampoo - ₹195
- Nirogam Neem Tablet - ₹16
- Kerala Ayurveda Jathyadi Thailam - ₹109
- Kerala Ayurveda Guluchyadi Kwath - ₹199
- Kerala Ayurveda Punarnavadi Kwath - ₹130
- Dabur Madhu Rakshak 250gm - ₹356
- Kerala Ayurveda Aragwadadi Kwath - ₹139
- Patanjali Neem Kanti Body Cleanser 75gm - ₹20
- Kerala Ayurveda Pathyashadangam Kwath - ₹139
- Unjha Raktashodhak Tonic 200ml - ₹164
- Baidyanath Shilajitwadi Bati (Ord) (30) - ₹68
- Moha Herbal Anti Dandruff Shampoo 200ml - ₹258
- Baidyanath Shilajitwadi Bati (Ord) (20) - ₹59
- Vringra Piles Capsules - ₹299
- Moha Anti Dandruff Oil 100ml - ₹152
- Herbal Hills Glohills Capsule (30) - ₹325
- Dabur Maha Narayan Tail 100ml - ₹170
- Herbal Hills Glohills Face Pack - ₹195
- Himalaya Aactaril Soap - ₹95
- Sri Sri Tattva Rakta Shodhini Arista Syrup Blood purifier - ₹180
- Kerala Ayurveda Heposem - ₹480
- Herbal Hills Glohills Face Cream - ₹195
- Planet Ayurveda Neem Powder - ₹400
- Baidyanath Shilajitwadi Bati (Swarna Yukta) - ₹2317
- Aimil Amypure Syrup 200ml - ₹178
- Planet Ayurveda Navkarshik Churna - ₹530
- Aimil Purodil Gel - ₹167
- Herbal Canada Karela Jamun Ras - ₹170
- Unjha Raktashodhak Tonic 450ml - ₹240
- Kairali Kottamchukkadi Thailam - ₹224
- Kerala Ayurveda Amruthotharam Kashayam Tablet - ₹380
- Biogetica Hyperisince Tablet (80) - ₹1599
- Himalaya Complete Care Toothpaste 150gm - ₹85
- Unjha Jambruyog Tablet - ₹426
- Planet Ayurveda Madhumehantak Churna - ₹530
- Planet Ayurveda Neem Capsule - ₹1215
- Baidyanath Amlapittantak Syrup - ₹162
- Aimil Amree Plus Granules - ₹429
- Aimil Purodil Tablet - ₹152
- Herbal Canada Neem Ras - ₹170
மேற்கோள்கள்
- Anjali Singh, Anil Kumar Singh, G. Narayan, Teja B. Singh, Vijay Kumar Shukla. Effect of Neem oil and Haridra on non-healing wounds . Ayu. 2014 Oct-Dec; 35(4): 398–403. PMID: 26195902
- Heukelbach J, Oliveira FA, Speare R. A new shampoo based on neem (Azadirachta indica) is highly effective against head lice in vitro. Parasitol Res. 2006 Sep;99(4):353-6. Epub 2006 Mar 28. PMID: 16568334
- Beuth J, Schneider H, Ko HL. Enhancement of immune responses to neem leaf extract (Azadirachta indica) correlates with antineoplastic activity in BALB/c-mice. In Vivo. 2006 Mar-Apr;20(2):247-51. PMID: 16634526
- Dr. Farhat S. Daud et al. A Study of Antibacterial Effect of Some Selected Essential Oils and Medicinal Herbs Against Acne Causing Bacteria . International Journal of Pharmaceutical Science Invention, Volume 2 Issue 1 ‖‖ January 2013 ‖‖ PP.27-34
- Khosla P, Gupta A, Singh J. A study of cardiovascular effects of Azadirachta indica (neem) on isolated perfused heart preparations. Indian J Physiol Pharmacol. 2002 Apr;46(2):241-4. PMID: 12500501
- Lingzhi Wang et al. Anticancer properties of nimbolide and pharmacokinetic considerations to accelerate its development Oncotarget. 2016 Jul 12; 7(28): 44790–44802. PMID: 27027349
- Subramani R et al. Nimbolide inhibits pancreatic cancer growth and metastasis through ROS-mediated apoptosis and inhibition of epithelial-to-mesenchymal transition. Sci Rep. 2016 Jan 25;6:19819. PMID: 26804739
- National Research Council (US) Panel on Neem. Neem: A Tree For Solving Global Problems. Washington (DC): National Academies Press (US); 1992. APPENDIX B, BREAKTHROUGHS IN POPULATION CONTROL? .
- Maity P, Biswas K, Chattopadhyay I, Banerjee RK, Bandyopadhyay U. The use of neem for controlling gastric hyperacidity and ulcer. Phytother Res. 2009 Jun;23(6):747-55. PMID: 19140119
- Bandyopadhyay U. Clinical studies on the effect of Neem (Azadirachta indica) bark extract on gastric secretion and gastroduodenal ulcer. Life Sci. 2004 Oct 29;75(24):2867-78. PMID: 15454339
- David A. Ofusori, Benedict A. Falana, Adebimpe E. Ofusori, Ezekiel A. Caxton-Martins. Regenerative Potential of Aqueous Extract of Neem Azadirachta indica on the Stomach and Ileum Following Ethanol-induced Mucosa Lesion in Adult Wistar Rats . Gastroenterology Res. 2010 Apr; 3(2): 86–90. PMID: 27956991
- T. Lakshmi, Vidya Krishnan, R Rajendran, N. Madhusudhanan. Azadirachta indica: A herbal panacea in dentistry – An update . Pharmacogn Rev. 2015 Jan-Jun; 9(17): 41–44. PMID: 26009692
- Ajay Mishra, Nikhil Dave. Neem oil poisoning: Case report of an adult with toxic encephalopathy . Indian J Crit Care Med. 2013 Sep-Oct; 17(5): 321–322. PMID: 24339648
- de Groot A, Jagtman BA, Woutersen M. Contact Allergy to Neem Oil. Dermatitis. 2017 Nov/Dec;28(6):360-362. PMID: 29059091
தொடர்பான கட்டுரைகள்
நோயெதிர்ப்பு எப்படி அதிகரிப்...
ஆல மரத்தின் பயன்கள், நன்மைகள...
கார்போஹைட்ரேட்டுகள்: உணவுகள்...
புரதம்: உணவுகள், பயன்கள் மற்...
முகத்தில் நிறமேற்றத்தை எவ்வா...
வெந்தயம் (மேத்தி) : நன்மைகள்...
Call Us: +918080802665
வேம்பின் நன்மைகள் | Benefits of neem in Tamil
English हिन्दी Tamil
வேம்பு ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது? (Why neem so healthy in Tamil?)
- பழங்காலத்திலிருந்தே பல்வேறு வகையான மூலிகைகள் தயாரிக்க வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வேப்பை Indian Lilac என்றும் கூறுவர்.
- ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி போன்ற மருந்துகளில் வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வேம்பு அனைத்து நோய்களையும் தடுக்கும் , என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் அனைத்து நோய்களையும் குணபடுத்தும் என்பதாகும் .
- இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகிறது, இதனால் ஒவ்வொரு மொழியிலும் வேப்பத்தை வெவ்வேறு பெயர்களில் வழங்குகின்றனர் , அவை : மராத்தியில் கடுலிம்ப், உ.பி. மற்றும் பீகாரில் வேம்பு, மலையாளத்தில் அரு வேப்பிலா, தமிழில் வேப்பிலை, தெலுங்கில் வேம், குஜராத்தியில் லிம்பா, கன்னடத்தில் பெவு , பெங்காலியில் நிம்பா பாடா .
- வேம்பில் ஆன்ட்டி செப்டிக் மற்றும் ஆன்ட்டி வைரல் பண்புகள் உள்ளன. மேலும் , வேம்பு பல நோய்களின் அறிகுறிகளைக் குணப்படுத்துகிறது . இதனால் வேம்பினை மர மருந்தகம் என்றும் அழைக்கின்றனர்.
வேம்பின் நன்மைகள் என்ன? ( What are the benefits of neem in Tamil?)
வேப்பத்தினால் ஏற்படும் தீர்வுகள் என்ன ( what are the treatments of neem in tamil).
- புற்றுநோய் நோயைத் தடுப்பதில் வேம்பின் பயன்பாடு (Neem prevents Cancer)- புற்றுநோயை குணப்படுத்துவதில் வேம்பு பெரிதும் உதவுகிறது . கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பைக் குறைக்க வே ப்பம் பழங்கள் , விதைகள் , இலைகள் , பூக்கள் என அனைத்தும் உதவுகிறது என்று புற்றுநோய் நிறுவனம் கூறுகின்றது .
- தலைமுடியில் பேனை குறைப்பதில் (Reducing lice in hair)- வேம்பில் உள்ள பூச்சிக்கொல்லி பண்புகள் முடியில் உள்ள பேன் மற்றும் பொடுகு போன்றவற்றை எளிதில் நீக்குகிறது. கூந்தலுக்கு வேப்ப எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் கேசத்தில் உண்டாகும் அரிப்பு பிரச்சினையை தீர்க்க இயலும்.
- வேப்ப இலைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் (Benefits of eating neem leaves) வேப்ப இலைகளை உட்கொள்வது இரத்தத்தை தூய்மையாக்குகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் வைரஸ்களிலிருந்து விடுபட உதவுகிறது.
- தோல் பாதுகாப்பில் வேப்பத்தின் பயன்பாடு (Skin Protection) வேப்ப இலைகள் தோல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நீக்குகிறது மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கிறது.
- நீரிழிவு நோய் (To treat Diabetes) நீரிழிவு நோயைக் ( diabetes ) கட்டுப்படுத்த வேம்பு இலைகளின் சாற்றை குடிப்பது பயனுள்ளதாக அமையும்.
- நகத்தில் உண்டாகும் நோய்த்தொற்றுகளை நீக்க (Removes Nail infection)- வேப்ப இலைகளில் ஆன்ட்டி செப்டிக் மற்றும் ஆன்ட்டி ஃப்பன்ங்கள் பண்புகள் உள்ளன, இது பாக்டீரியாக்களைக் அழிக்கிறது. மேலும், டோனல் ஃப்பன்ங்கஸையும் குணப்படுத்துகிறது.
- வேப்ப நீரில் குளிப்பது (Useful in bathing)- வேப்ப இலைகளை சேர்த்து கொதிக்க வைத்த நீரில் குளிப்பதன் மூலம் பாக்டீரியல் தொற்றுகள் ஏற்படாது. மேலும், தோல் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். வேப்பத்தை காப்ஸ்யூல்களாகவும், தூளாக்கியும் பயன்படுத்தலாம்.
- கீல்வாதத்தில் (Beneficial for arthritis)- குறிப்பாக முடக்கு வாதத்தை குணப்படுத்தும் ஒரு மூலிகை மருந்தாக வேம்பு இருக்கின்றது. இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
- வயிற்றுப் புழுக்களை நீக்குவதில் (Removing stomach worms)- வேம்பிலுள்ள கசப்பு காரணமாக, பாக்டீரியாக்கள் இறக்கின்றது. 1 அல்லது 2 வேப்ப இலைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள், இதனால் வயிற்றிலுள்ள கிருமிகள் சாகும்.
- வேப்ப எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதனால் மூட்டுகள் மற்றும் எலும்புகளின் வீக்கத்தை குறைக்க இயலும். இதன் காரணமாக கீல்வாதம் பிரச்சினை நீங்குகிறது.
- மஞ்சள் காமாலை பிரச்சினை பித்தப்பையில் இருந்து வெளிவரும் பித்தத்தின் அடைப்பினால் உண்டாகிறது . இதிலிருந்து விடுபட உலர்ந்த இஞ்சியுடன் வேப்ப இலை சாறு கலந்து குடிக்கவும் .
- அதிக உணவுகளை உட்கொண்டதன் காரணமாக நாட்பட்ட காய்ச்சல் மற்றும் உயர் மண்ணீரல் (high spleen) போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் , தண்ணீரில் வேப்ப இலை பொடியை கலந்து குடிக்கவும்.
- உடலுறவின் போது பலவீனமாக இருக்கும் நபர்கள் வேப்பம் உட்கொள்ளைக் குறைக்க வேண்டும்.
- பாதங்கள் மற்றும் உள்ளங்கால்களின் உண்டாகும் எரிச்சலை நீக்க, அப்பகுதியில் வேப்ப இலைகளை அரைத்துத் தடவுங்கள்.
- உடல் சூட்டை குறைக்க நீரில் வேப்பங்கொட்டையுடன் சர்க்கரையை கலந்து அந்த சாற்றை குடிக்கவும் .
- பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் படுக்கையில் வேப்ப இலைகளை பரப்ப வேண்டும், இதன் காரணமாக பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்கள் உடலிலிருந்து வெளியேறி நோயை விரைவாக நீங்குகிறது .
வேப்ப இலை உட்கொள்ளல் அல்லது அதன் சாறு குடிப்பதன் மூலம் உங்களுக்கு உடல்நலம் தொடர்பான ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், உடனடியாக உங்கள் அருகிலுள்ள மருத்துவரைத் தொடர்புகொள்ளவும். தேவையானால் இன்றே ஒரு பொது மருத்துவரைத் தொடர்பு ( General Physician ) கொள்ளுங்கள்.
மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)
சென்னையில் சிறந்த பொது மருத்துவர் ( Best General Physician in Chennai)
பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் ( Best General Physician in Bangalore)
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் ( Best General Physician in Delhi)
Login to Health
எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
Related Articles
Over 1 million users visit us monthly, join our email list to get the exclusive unpublished health content right in your inbox.
- Agriculture
வேம்பு கசக்கும்... அதன் வருமானம் இனிக்கும்... எப்படி?
வேம்பின் மரம் உறுதியானதால் தச்சு வேலைகளுக்கும், தீக்குச்சி போன்றவற்றுக்கும் பயன்படும். மலைவேம்பைவிடவும் மிக நல்ல விலைக்குப் போய்விடும்.
கடந்த ஆண்டு வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ.38 விலையாக இருந்தது. இந்த ஆண்டு கிலோ ரூ.7 உயர்ந்திருக்கிறது. வேம்புவின் தேவை அதிகமாக இருப்பதால் வேப்பங்கொட்டைகள் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
வேப்பமரம் ஒரு விவசாயப் பயிர் கிடையாது. ஒரே இடத்தில் விளைவிக்கப்படுவதில்லை. முன்புபோல வேப்பங்கொட்டைகளைச் சேகரிக்கும் மக்களும், வீடுகளுக்கு சென்று சேகரிக்கும் சிறு வணிகர்களும் தொடர்ந்து குறைந்து வருவதாலும், வேப்பெண்ணெய் மற்றும் வேப்பம் புண்ணாக்கு தேவைகள் அதிகரித்து வருவதாலும் விலை உயர்ந்து வருகிறது.
வேம்பு / வேப்ப மரம் – நம் மூலிகை அறிவோம்
- Post author By admin
- Categories In மூலிகைகள்
Join Our Whatsapp Channel for more infos, updates, free trainings and for health tips...
Azadirachta indica; வேப்ப மரம்
தமிழகத்தில் திரும்பும் இடமெல்லாம் பார்க்கக்கூடிய ஒரு மூலிகை மரம் வேம்பு. இந்த வேப்பமரம் சிறந்த ஒரு கிருமி நாசினியாக உள்ளது. வேப்ப மரம், நிம்பம், அறிட்டம்ம் பிசுமந்தம், வாதாரி, பாரிபத்திரம் என பல பெயர்களை கொண்டிருக்கக்கூடிய ஒரு மூலிகை மரம்கள் இந்த மூலிகை மரம் வேம்பிற்கு உள்ளது. சமஸ்கிருதத்தில் இதனை நிம்பா என்றும் அழைப்பதுண்டு.
ரம்பம் போன்ற இலைவிளும்புடைய, சிறகு போன்ற வடிவத்தில் கூட்டிலைகளை மாற்றிலை அடுக்கில் இருக்கும். கூடாக வெண்மை நிற மலர்கள் இலைக் கோணங்களில் காணப்படும். வேம்பின் காய்கள் நீள வட்ட வடிவத்தில் பச்சை நிறத்தில் காணப்படும். காய்கள் பழுத்த பின் மஞ்சள் நிறமாக இருக்கும்.
வேப்பமரத்தின் சமூலமே மருத்துவ பயன் கொண்டது. அதேப்போல் கசப்பு சுவையை கொண்டது இந்த மரம். வெப்பத்தை அதிகரிக்க கூடிய தன்மையையும் கார்ப்பு பிரிவையும் கொண்டது.
வேம்பின் விதையில் Azadirachtin எனும் கசப்பு வேதிப்பொருட்களும் பட்டையில் Tannin உள்ளன. இது புழு பூச்சிகளை கொள்வதற்கும், வெப்பத்தை உண்டாக்கவும், உரமுண்டாக்கியாகவும் உள்ளது. வேப்பமரம் வயிற்றுப்புழு, மாந்தம், அம்மை, சொறி சிரங்கு, காமாலை, கப நோய்கள், புழுவெட்டு, கட்டிகள், பலமின்மை, சுவையின்மை, வாந்தி, விஷம், காய்ச்சல், உடல் வலி என பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
கட்டிகள் வீக்கம் நீங்க
வேப்பிலையை நீர்விட்டு அரைத்து கட்டி வர நாள்பட்ட புண்கள், பழுத்து உடையாத கட்டிகள், வீக்கம் முதலியன குணமாகும்.
வேப்பிலை குடிநீர்
வேப்பிலையைக் குடிநீர் செய்து பருகிவர பித்தப்பையில் உள்ள அதிக நீரை வெளியேற்றி காமாலையைக் குணப்படுத்தும்.
கப நோய் நீங்க
வேப்பிலையை ஏதேனும் ஒரு முறையில் தொடர்ந்து உண்டுவர புத்தி தெளிவடையும். சூட்டை அதிகப்படுத்தி கப நோய்களை நீக்கும். பொதுவாக நம் முன்னோர்கள் அதிகாலையும் வேப்பங்கோலுந்தையும் வேப்பங்குச்சியையும் பயன்படுத்தினர். காலை இரண்டு வேப்பங்கொலுந்தை பறித்து வாயில் மெல்வதால் பல விதங்களில் அது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
தோல் நோய்களுக்கு
வேப்பம் விதைப் பொடியை தேன் கலந்துதொடர்ந்து உண்டு வர தோல் நோய், நரம்பு வலி, மூலம், குடல் புழுக்கள், சூதக ஜன்னி ஆகியன தீரும்.
வேப்பங்கொழுந்து
வேப்பங்கொழுந்துடன் சிறிது முதிர்ந்த இலை, ஓமம், உப்பு சேர்த்து பொடி தயாரித்து சாப்பிட்டு வர கண் படல மறைப்பு, கட்டிகள், புழுவெட்டு, மாலைக்கண், வெள்ளை, காமாலை, கழிச்சல் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் வேப்பங்கொழுந்து வயிற்றுப் பொருமல், அஜீரணம், குடல்புழு, மாந்தம், மலச்சிக்கல் அகிய தொந்தரவுகளையும் தீர்க்கும்.
பரு, கட்டி நீங்க
வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துக் கட்டி வர பித்தவெடிப்பு, அம்மைக் கொப்புளம், பொன்னுக்கு வீங்கி, பரு, கட்டி, புண்கள் நீங்கும்.
வேப்ப எண்ணெய்
வேப்ப விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வேப்ப எண்ணெய். இதனுடன் வேலிப்பருத்தி இலையை சேர்த்து இளம் சூட்டில் வதக்கி ஒற்றடமிட ஜன்னியினால் ஏற்படும் வலி, நரம்பு வலி, கீல்வாதம், சிரங்கு, கரப்பான் முதலியன தீரும்.
தொழுநோய் நீங்க
50 வருடங்களுக்கு மேலான வேப்ப மரப்பட்டையும் நாள்பட்ட பூவரசமரம் பட்டையையும் சம பங்கு பொடி செய்து 2 கிராம் வீதம் தினம் இரண்டு வேளை தேனுடன் தொடர்ந்து நீண்ட நாட்கள் உண்டுவர தொழுநோய் மற்றும் தோல் நோய் மறையும்.
வேப்பம் பூ குடிநீர்
வேப்பம் பூவை குடிநீர் செய்து தினமும் பருகி வர உடல் பலக்குறைவு நீங்கும். வயிற்று வலி, அஜீரணம் தீரும். மேலும் இந்த வேப்பம் பூவைக்கொண்டு வேப்பம்பூ ரசம் செய்தும் மற்ற உணவுகளை தயாரித்தும் உண்ணலாம்.
தலைவலி தீர வேப்பம் புண்ணாக்கு புகை
வேப்பம் புண்ணாக்கை பொடி செய்து அதை நெருப்பில் இட்டு முகர மூக்கிலிருந்து நீர் வடியும். தும்மல் உண்டாகும். தலைவலி மற்றும் வாத, பித்த, கப நோய்கள் தீரும். கொசுக்களும் ஒழியும்.
Do check our New English Recipe Website
- Samayam News
- பிஸ்தா நன்மைகள்
- புரோஸ்டேட் கேன்சர்
- வழுக்கை விழாமல் இருக்க
- கர்ப்பிணி நோய் தவிர்க்க
- Importance Of Neem Tree
வேப்பிலையின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
வேப்ப மரத்தின் அடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும், அதனை பார்ப்பதாலும் ஒருவிதமான மன அமைதி கிடைக்கிறது..
உங்களுக்கானவை
அடுத்த செய்தி
வேப்பம் பூவில் பொதிந்து கிடக்கும் அற்புத மருத்துவ பயன்கள்…
தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை. இதனாலேயே ‘கிராமத்தின் மருந்தகம்” என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது.
இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை.
அவ்வகையில் வேப்பம் பூவின் மருத்துவ பயன்கள் இதோ!
1.. வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் சரியாகிவிடும்.
2.. ஐந்து கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும்.
3.. மூன்று கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும்.
4.. நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.
5.. வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க உடல் பித்தம் தீரும்.
6.. காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.
7.. வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.
8.. வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.
9.. நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.
10.. வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி குணமாகும்.
Latest Videos
RELATED STORIES
பூனை மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த காபி தான் உலகின் மிகவும் விலை உயர்ந்த காபி!
மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்ணாம்பு! ஆனா தயிருடன் சேர்த்து சாப்பிடலாமா?
திருமண மண்டபத்துல சாப்பிடலாம்... ஆனா வாய் மட்டும் கொப்பளிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
காலை உணவாக ராகி, சோளம், கோதுமை ரொட்டி; எது சிறந்தது?
தலைவலி வந்தால் உடனே மாத்திரை போடுறீங்களா? அது எவ்வளவு ஆபத்துன்னு தெரியுமா?
Top Stories
ஜப்பானுக்குக் கூட்டிச் செல்லும் ரயில்வே! IRCTC வழங்கும் 8 நாள் சுற்றுலா பேக்கேஜ்!
மகர ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – விடிவுகாலம் பிறக்குமா? முடிய போகுது ஏழரை, அள்ளி கொடுக்கும் சனி!
Jio-வை முடிச்சிட்டீங்க போங்க.. இருங்க பாய்.. BSNL பிளான் ஒரு நாளைக்கு ரூ. 3.50 தான்!
தம்பி தம்பி சொல்லிட்டு விஜய்யை சீமான் திடீரென பொளப்பது ஏன்.? உண்மையைப் போட்டு உடைத்த சாட்டை துரைமுருகன்
தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்ய சிம்பிளான வழி! இதைச் செய்தால் போதும்!
Recent Videos
பிக் பாஸ் சீசன் 8; 25வது நாளை கவினுடன் கேக் வெட்டி கொண்டாடிய போட்டியாளர்கள் - Viral Video!
ஹாப்பி எண்டிங்; சூர்யா 45 முடிஞ்ச கையோடு அடுத்த படத்திற்கு செல்லும் RJ பாலாஜி - Viral Video!
TN Rain Update: நாளை தீபாவளி பண்டிகை! வானிலை மையம் சொன்ன அதிர்ச்சி ரிப்போர்ட்!
விஜய்க்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - செல்வப்பெருந்தகை சரவெடி பேச்சு
லோகேஷின் யூனிவெர்ஸ்; மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஒரு புதிய ஹீரோ - மரண மாஸ் வீடியோ இதோ!
IMAGES
VIDEO
COMMENTS
நோய் எதிர்ப்பு அமைப்புக்கான வேம்பு - Neem for immune system in Tamil; சருமத்திற்கு வேம்பின் நன்மைகள் - Neem benefits for skin in Tamil; ஆஸ்துமாவுக்கு …
வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள்
விகடன் இப்போது… வேப்ப மரத்தின் இலை, மரப்பட்டை, வேர், பழம், விதை, எண்ணெய், குச்சி என அனைத்துப் பகுதிகளும் பல்வேறு நோய்களுக்கு …
விகடன் இப்போது… வேம்பின் மரம் உறுதியானதால் தச்சு வேலைகளுக்கும், தீக்குச்சி போன்றவற்றிற்கும் பயன்படும். மலைவேம்பை …
Neem Tree Health Benefits and Medicinal Uses - சிறந்த ஒரு கிருமி நாசினி இந்த வேப்பமரம். தோல் நோய்கள் உட்பட பல நோய்களுக்கு மருந்து.
வேப்பிலையின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? வேப்ப மரத்தின் அடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும், …
neem juice benefits in tamil: 'அசாடிராக்டா இண்டிகா' என்றும் அழைக்கப்படும் வேப்ப மரம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மரமாகும். …
Tamil News. health. வேப்பம் பூவில் பொதிந்து கிடக்கும் அற்புத மருத்துவ பயன்கள்… Wonderful Medicare Benefits of Neem flower. First Published Jul 1, 2017, 1:33 PM IST | Last …