- தற்போதைய செய்திகள்
- திரை / சின்னத்திரை
- வெப் ஸ்டோரிஸ்
- விஷுவல் ஸ்டோரிஸ்
போதை இல்லா தமிழகம்: போதை பொருள்கள் தடுப்பு குறித்த தலையங்கம்
தமிழகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தைத் தடுப்பதற்காக மாநில அரசு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை காலத்தின் கட்டாயம் என்றே கூற வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்திருப்பதும், அவற்றைப் பயன்படுத்துவோா், குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் வேதனையளிப்பதாக தெரிவித்துள்ள முதல்வா் மு.க. ஸ்டாலின், போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடா்பாக பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளாா்.
அவற்றில், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி பதவி உருவாக்கப்பட்டு, அந்தப் பிரிவு வலுப்படுத்தப்படும், போதைப்பொருள்களை விற்பனை செய்வோா் கைது செய்யப்பட்டு அவா்களின் சொத்துகள் முடக்கப்படும் போன்ற அறிவிப்புகள் முக்கியமானவை. போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியா்களுடனும் காவல்துறை கண்காணிப்பாளா்களுடன் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, போதைப் பொருள்களைத் தடுப்பதற்கான மேலும் பல ஆலோசனைகளையும் முதல்வா் வழங்கினாா்.
அடுத்தடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தலைமையில் போதைப் பொருள்கள் தடுப்பு மாநாடு, பள்ளிகள், கல்லூரிகளில் மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு உறுதிமொழி என போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
போதைப் பொருள்களைக் கடத்தினால் சொத்துகள் முடக்கம் என்கிற அறிவிப்பு, அப்பொருள்களைக் கடத்துவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தி, கடத்தலை கைவிடச் செய்ய வழிவகுக்கும். டிஎஸ்பி தலைமையிலான நுண்ணறிவுப் பிரிவு என்பது, போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை குறித்த தகவல்களை கூடுதல் தீவிரத்துடன் கண்டறிந்து தடுக்க உதவும்.
தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான கடந்த 10 ஆண்டு காலத்தில் ரூ.38 கோடி மதிப்பில் 952 டன் அளவிலான குட்கா, பான் மசாலா கைப்பற்றப்பட்டுள்ளன; திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த ஜூன் மாதம் வரை ரூ. 9 கோடி மதிப்பிலான 152 டன் குட்கா, பான் மசாலா பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், குட்கா, பான் மசாலா விற்பனையில் ஈடுபட்ட சிறு வியாபாரிகள் மீது கடந்த 10 ஆண்டு காலத்தில் சுமாா் ரூ. 3 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது அரசு அளித்துள்ள புள்ளிவிவரம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை போதைப் பொருள்கள் நமது மாநிலத்தில் தயாரிக்கப்படவில்லை, வெளிமாநிலங்களிலிருந்தே இங்கு கடத்தி வரப்படுகின்றன என்று அரசு தெளிவாகச் சொல்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் அளவே இவ்வளவு இருக்கும்போது, விற்பனையான, இன்னும் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதைப் பொருள்களின் அளவை நினைத்தால் மலைப்பு ஏற்படுகிறது.
வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தனிக் குழுக்களை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு போதைப் பொருள்களை விற்பனை செய்வது காவல்துறையினருக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதைத் தடுக்க போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவில் ‘சைபா் செல்’ தனியாக ஏற்படுத்தப்படும் என்கிற அரசின் முடிவு சரியானது.
போதைப் பொருள் அதனைப் பயன்படுத்தும் தனிமனிதா்களுக்கு மட்டும் தீங்கிழைப்பதல்ல. அது மிகப்பெரும் சமூகப் பிரச்னையாகவும் தற்போது மாறி வருகிறது. பெரும் குற்றங்களைச் செய்யவும் போதைப் பொருள் ஊக்கமளிக்கிறது.
சிறாா்கள்கூட மது, குட்கா, பான்மசாலா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகி சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதும், பொது இடங்களில் வன்முறையில் ஈடுபடுவதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக மாறிவிட்டன. சில இடங்களில் பள்ளி மாணவிகள்கூட மது அருந்தும் விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி மனதை கனக்கச் செய்தது.
1987-ஆம் ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி ஐ.நா. பொதுச் சபை அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் போதைப் பொருள்களுக்கு எதிரான தினமாக ஜூன் 26-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வையும் ஐ.நா. ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், உலகம் முழுவதும் போதைப்பொருள் இன்று அழிக்க முடியாத தீயசக்தியாக வளா்ந்து நிற்கிறது.
இந்த சூழலில் போதைப் பொருள்களின் தீமை குறித்து மாணவா்களுக்கு இளம் வயதிலேயே விளக்க வேண்டிய கடமை பெற்றோருக்கும், ஆசிரியா்களுக்கும் உள்ளது. என்றாவது ஒருநாள் விழிப்புணா்வு உறுதிமொழி எடுப்பதுடன் நிறுத்தி விடாமல், போதைப் பொருள்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து அடிக்கடி விவாதிக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும்.
பேருந்துகள், ரயில்கள், சரக்கு வாகனங்கள் என போதைப் பொருள்கள் கடத்திவரப்படும் வாய்ப்புகள் அனைத்தையும் தடுக்க காவல்துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லை சோதனைச்சாவடிகளில் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் போன்றவற்றை அலட்சியத்துடன் அனுமதிப்பது இப்போதும் நடந்து வருகிறது. அதுபோல அல்லாமல் போதைப் பொருள்கள் கடத்தப்படும் வாகனங்கள் குறித்து உண்மையான சோதனை அவசியம்.
இந்த வேளையில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். டாஸ்மாக் மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்கவும், பள்ளி மாணவா்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook , Twitter , Instagram , Youtube , Telegram , Threads
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
Related Stories
- மாநில செய்திகள்
- தேசிய செய்திகள்
- உலக செய்திகள்
- சிறப்புக் கட்டுரைகள்
- சினிமா செய்திகள்
- பிற விளையாட்டு
- இந்தியா Vs நியூசிலாந்து
- கல்வி/வேலைவாய்ப்பு
- இன்றைய பலன்
- வார ராசிபலன்
- மாத ராசிபலன்
- சுப முகூர்த்த நாட்கள்
- வாஸ்து நாட்கள்
- விரத நாட்கள்
- புகார் பெட்டி
- உலக கோப்பை கிரிக்கெட்
- நாடாளுமன்ற தேர்தல்-2024
- கர்நாடகா தேர்தல்
- டி20 உலகக்கோப்பை
- ராமர் கோவில் ஸ்பெஷல்
- தேர்தல் முடிவுகள்
- மத்திய பட்ஜெட் - 2023
- 5 மாநில தேர்தல் முடிவுகள்
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- ஐபிஎல் 2022
- உலக கோப்பை கால்பந்து - 2022
- ஆசிய விளையாட்டு
- ஒலிம்பிக் 2024
போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு!
தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப் பொருள் விற்பனையும், பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப் பொருள் விற்பனையும், பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதையும் மறைப்பதில்லை. உண்மை நிலையை, நாட்டின் நடப்பு நிலையை அப்படியே சொல்லிவிடுகிறார்.
அந்த வகையில், கடந்த 10-ந்தேதி சென்னையில், "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" திட்ட தொடக்க விழாவின்போது, "தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதை நினைக்கும்போது, எனக்கு கவலையும், வருத்தமும் அதிகமாகிறது" என்று வெளிப்படையாகவே தெரிவித்தார். போதைப் பொருட்களின் பயன்பாட்டை வேரோடும் - வேரடி மண்ணோடும் களை எடுக்க அரசு மட்டுமல்ல, போலீஸ் மட்டுமல்ல, மக்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆந்திரா, ஒடிசா மற்றும் வடமாநிலங்களில் இருந்து, தமிழ்நாட்டுக்குள் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி சென்னைக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சென்னை சென்டிரலில் சமீப காலமாக கஞ்சா பிடிபடுவது அதிகமாகி இருக்கிறது. தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடந்த டிசம்பர் முதல் மார்ச் வரை கஞ்சா வேட்டை 1 என்றும், ஏப்ரல் முதல் ஜூலை வரை கஞ்சா வேட்டை 2 என்றும் மாநிலம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்த உத்தரவிட்டார். இந்த இரு வேட்டைகளிலும், பள்ளிக்கூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்றது, பயன்படுத்தியது, பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், ஏன் ஆஸ்பத்திரி வளாகங்களுக்குள்ளேயே கஞ்சா விற்பனையானது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே, கஞ்சா பொட்டலங்கள் கொண்ட மஞ்சள் பை ரெயிலில் இருந்து தூக்கிவீசப்பட்டதையும், அதை ஒருவன் எடுத்து சென்றதையும் 'தினத்தந்தி' போட்டோகிராபர் படம் எடுத்து, தினத்தந்தியில் அது பிரசுரிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று சூளுரைத்து, கடந்த 10-ந்தேதி சென்னையில், போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி, கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார். "எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்துவிட்டேன்' என்று ஒவ்வொரு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்துக்கொண்டாலே போதும், அதுவே முதல் வெற்றி. போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்துவிட முடியும்" என்று கூறி, பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தார்.
இப்போது இருக்கும் பல சட்டப்பிரிவுகளை குறிப்பிட்டு, போதைப் பொருள் குற்றங்களை செய்பவர்கள், குறிப்பாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் போன்ற இடங்களில் போதைப் பொருள் விற்பவர்களுக்கு அதிக தண்டனை பிறப்பிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மிக அருமையான மற்றொரு ஆலோசனையாக, போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க, அடுத்த நாள் நடந்த விழாவில் பேசும்போது, 2 ஆலோசனைகளை அவர் கூறினார். முதல் வழி, போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, அதை விற்பவர்களை கைது செய்வது, இது சட்டத்தின் வழி. இதை அரசும், குறிப்பாக காவல் துறையும் கவனிக்கும். 2-வது வழி, போதை மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தான். இதை பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டும்தான், அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று கூறி, கடந்த 11-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இது ஒரு சமுதாய சீர்கேடு என்ற வகையில், ஒரு பக்கம் காவல் துறையும், மற்றொரு பக்கம் பொதுமக்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வும்தான் தடுக்க முடியும். அதை செய்யும் கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
- போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு
மேலும் செய்திகள்
ஆசிரியரின் தேர்வுகள்..., அதிகம் வாசிக்கப்பட்டவை.
- சிறப்பு கட்டுரைகள்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
Stalin launches ‘Drug Free Tamil Nadu’ scheme
After launching the scheme, the Chief Minister inaugurated a new wing of police named "Enforcement Bureau- Crime Investigation Department" by combining the Narcotics Intelligence Bureau and Prohibition Enforcement Wing to attain the target of "Drug Free Tamil Nadu".
CHENNAI: Chief Minister MK Stalin on Thursday launched the scheme of "Drug Free Tamil Nadu" under which several awareness programme have been planned to eradicate narcotic substances in the State.
Then, he also launched the programme of creating 30 hours of continuous awareness against drugs by volunteers of NCC and NSS followed by which the Chief Minister administered the pledge against usage and addiction of drugs. More than 30 lakh school and college students took pledge through video conference and this created new records for most number of students taking pledge at a single occasion.
The Chief Minister was presented with record certificates by the World Records Union and Asia Book of Records. MLAs of various political parties joined the meeting through video conference and in the function PMK Assembly party leader GK Mani, from Dharmapuri, appreciated the steps taken by the State government in banning narcotics substances.
A short film on the ill effects of drug addiction and ways to bring the youth out of the clutches of drugs was launched by the Chief Minister in which he had requested the youngsters and the public not to choose the path of drug addiction. Actors like Karthi, Sivakarthikeyan, Varalakshmi Sararthkumar, Parthiban, Madhavan and others had also spoken against the drugs in the documentary.
After launching the series of programme, Stalin, in his address, said: "Persons selling narcotics substances cannot be treated as individual criminals but as people infecting the entire society. The ruling government will not hesitate to take stringent action on those criminals. So far, after DMK came to power 41,625 persons selling narcotics substances were arrested and properties worth more than Rs 50 crore have been seized yet the movement of narcotics substances could not be stopped completely and the narcotic substances manage to reach the persons. The supply chain should be broken."
"Consuming narcotic substances is not an isolated crime but will affect the entire society. Crimes such as murder, dacoity, sexual harassment of women and so on are committed by criminals who are mostly under the influence of narcotic substances,” said Stalin.
Visit news.dtnext.in to explore our interactive epaper!
Download the DT Next app for more exciting features!
Click here for iOS
Click here for Android
DTNEXT Bureau
Related articles.
- government and politics
`தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?' - ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி!
மத்திய புலனாய்வு அமைப்புகள் போதைப் பொருள்களை கட்டுப்படுத்த முயற்சியெடுப்பதுபோல, தமிழகத்தில் ஏன் கஞ்சாவை கட்டுப்படுத்த முடியவில்லை என சங்கரன்கோயிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் அமைப்பு சார்பில் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சங்கரன்கோவில்-திருவேங்கடம் சாலையில் நடைபெற்ற போதைஒழிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "நவராத்திரி கொண்டாட்டம், தீமையை அழித்து மக்களுக்கு நன்மை, வெற்றியை கொடுக்கக்கூடிய நிகழ்வாகும். பொதுவாக நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒவ்வொரு நாள் மாலையும் ராஜ்பவனில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும். நன்மை, தீமைகளை பிரித்துக்காட்டி எல்லோருக்கும் வெற்றியைத் தேடித்தரும் இந்த பூஜையை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் ராஜ்பவனை விட்டு நவராத்திரி நாட்களில் வெளிவருவதில்லை. ஆனால் சங்கரன்கோவிலில் நடைபெறும் இந்த போதைஒழிப்பு பொதுக்கூட்டம் என் மனதிற்கு மிக நெருக்கமாக அமைந்துவிட்டது. அதற்காகவே இங்கு வந்தேன். நவராத்திரி பூஜை வழிபாடு எதற்காக செய்யப்படுகிறதோ அதை ஒத்த நன்மையைத்தான் இந்த விழிப்புணர்வுக்கூட்டம் தரவல்லது.
உறுதிமொழி ஏற்போம்
ஒரு வாரத்திற்கு 15 மணி நேரத்தை போதை ஒழிப்புக்காக அர்பணிப்போம்
அனைவரும் இணைந்து போதை ஒழிப்புக்காக செயல்படுவோம்
இளைஞர்கள் மாணவர்களை விழிப்படையச் செய்வோம்
கிராமங்கள் நகரங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்
தீர்வை நோக்கி களத்தில் நின்று போராடுவோம்
போதை கலாச்சாரத்திற்கு துணைபோகும் திமுகவை விரட்டி அடிப்போம்
போதை கலாச்சாரத்திலிருந்து தமிழகத்தை மீட்போம்!
Let's devote 15 hours a week to propagating de-addiction
Let's all work together for Drug Eradication
Let's make the youth aware of our fight against Drugs
We will go from villages to cities and create awareness
Let's stand and fight for a solution
Let's drive out DMK which supports the drug culture
Let's save Tamil Nadu from drug culture!
Take Pledge உறுதிமொழி ஏற்போம்
I will do my part to make our state of TamilNadu a better place.
தமிழகத்தை சிறந்த இடமாக மாற்ற எனது பங்களிப்பை செய்வேன்.
Thank you நன்றி
for giving request. கோரிக்கையை அளித்ததற்கு.
Please download your certificate. உங்கள் சான்றிதழைப் பதிவிறக்கவும்.
மொழியைத் தேர்வு செய்யவும்
தமிழில் உள்ள நுணுக்கங்கள்
No To Drugs: போதையற்ற தமிழகம்: உற்சாகமாக கையெழுத்திட்ட கமல்ஹாசன்
மதப்பிரச்சாரம் செய்கிறவர்கள், கோவில், தேவாலயம், மசூதிகளில் உள்ள ஓதுவார்கள், பிரசங்கம் செய்கிறவர்கள் என எல்லோரையும் ஒன்றுபடுத்தி இந்த போராட்டத் தை வாலிபர் சங்கம் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
சென்னையில் பேதையற்ற தமிழகம் என்ற நோக்கில் நடைபெறு வரும் கையெழுத்து இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கையெழுத்திட்டுள்ளார்.
போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்கக் கோரி ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தை விடுதலைப் போராட்ட வீரரும், முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மலிவாக கிடைக்கிறது. மாநில அரசு மது பான கடைகளை படிப்படியாக மூட வேண்டிய தேவை உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பபழக்கம் அதிகரித்து வருவதால் பல இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில், போதைப் பழக்கத்திலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாக்கவும், ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்கவும் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கம் ஞாயிறன்று (பிப்.12) தொடங்கியது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக், செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் ஆகியோரிடம் கையெழுத்திட்டு, இந்த இயக்கத்தை சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். அப்போது, ‘‘திறமை வாய்ந்தவர்கள், சிறப்பாக சிந்திக்கக்கூடியவர்கள் பலரும் போதையால் அழிந்துவிடுகின்றனர். பிற பிரச்சனைகளோடு ஒப்பிடும் போது பிரதான பிரச்சனையாக போதை உள்ளது. போதைப் பழக்கம் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும், நாட்டை அழிக்கும் முக்கிய பிரச்சனை. இதில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், மதப்பிரச்சாரம் செய்கிறவர்கள், கோவில், தேவாலயம், மசூதிகளில் உள்ள ஓதுவார்கள், பிரசங்கம் செய்கிறவர்கள் என எல்லோரையும் ஒன்றுபடுத்தி இந்த போராட்டத் தை வாலிபர் சங்கம் முன்னெடுத்து செல்ல வேண்டும். கல்வி வளாகங்களிலும், கிராமப்புற கல்வி நிலையங்களில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். போதை ஒழிப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் சங்கரய்யாவைத் தொடர்ந்து இயக்குநர்கள் வெற்றிமாறன், சசிகுமார் ஆகியோர் போதை ஒழிப்புக்காகக் கையெழுத்திட்டனர். இந்நிலையில் நேற்று நடிகர் கமல் ஹாசனிடம் வாலிபர் சங்க நிர்வாகிகள் போதை ஒழிப்புக்காக கையெழுத்து பெற்றனர்.
சென்னையில் இவ்வியக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு, திரைக்கலைஞர் கமல்ஹாசன் கையெழுத்திட்டு, பிரச்சார பதாகையை வெளியிட்டுள்ளார்.
IMAGES
VIDEO
COMMENTS
ஆசிரியர். Published on: 15 ஆகஸ்ட் 2022, 11:12 pm. Updated on: 15 ஆகஸ்ட் 2022, 11:12 pm. 2 min read. தமிழகத்தில் போதைப் …
தினத்தந்தி 18 Aug 2022 7:58 PM GMT. Text Size. தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப் பொருள் விற்பனையும், பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகமாகிக் …
CHENNAI: Chief Minister MK Stalin on Thursday launched the scheme of "Drug Free Tamil Nadu" under which several awareness programme have been planned to eradicate narcotic substances in the State.
Tamil Nadu launches its ‘Drug Free Tamil Nadu’ scheme under which several awareness programs have been planned to eradicate narcotic substances in the State
மேலும் படிக்க. விகடன் இப்போது… மத்திய புலனாய்வு அமைப்புகள் போதைப் பொருள்களை கட்டுப்படுத்த …
Let's all work together for Drug Eradication. Let's make the youth aware of our fight against Drugs. We will go from villages to cities and create awareness. Let's stand and fight for a solution. Let's drive out DMK which supports the drug …
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கைப்பற்றுதல் என்கிற நடவடிக்கையை தாண்டி, அதன் பயன்பாடு, அதன் மூலம் …
Published On October 24, 2024. “As a member of your family, as your father, I make a fervent appeal to the youth and students of Tamil Nadu. No one should go on the path of addiction”. …
இதன் தொடர்ச்சியாக வருகிற ஜுன் 26-ம் நாள் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை (International Day Against Drug abuse and Illicit Trafficking) முன்னிட்டு, சென்னை …
No To Drugs: போதையற்ற தமிழகம்: உற்சாகமாக கையெழுத்திட்ட கமல்ஹாசன். Pandeeswari Gurusamy HT Tamil Feb 16, 2023 01:24 PM IST. எங்களை பின் தொடரலாம். …